உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் எதிரே வாகனங்கள் நிறுத்துவதால் பக்தர்கள் அவதி

கோவில் எதிரே வாகனங்கள் நிறுத்துவதால் பக்தர்கள் அவதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, கே.ஆர்.பி., அணை வழியாக பச்சிகானப்பள்ளியில் உள்ள, மீன் கடைகளில் சாப்பிட சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில், கே.ஆர்.பி., அணை மேல் பகுதியில், பச்சிகானப்பள்ளி செல்லும் வழியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே, அணையில் நீராடுவோர், சாமியை வழிபடுவர். இவ்வாறு, வருவோரின் வாகனங்கள், கோவில் எதிரே சாலையோரம் நிறுத்தப்படுவதால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை, கே.ஆர்.பி., அணை, போலீசார் கண்காணிக்க வேண்டும், என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !