விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2665 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில, பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சந்தனம்,பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இன்று காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.