உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு

ஈரோடு: ஆடி, இரண்டாம் வெள்ளியான நேற்று, ஈரோட்டில் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் அபி ?ஷகம், அலங்காரம், தீபாரானை நடந்தது. பெரியமாரியம்மன் கோவில் மூலவர், மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், நடுமாரியம்மன் மற்றும் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு, விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள், கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். சிலர், வீட்டில் இருந்து கேழ்வரகு கூழ் சமைத்து கொண்டு வந்து, அம்மன் சன்னதிகளில் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

* தாராபுரம், போலீஸ் ஸ்டேஷன் முன் உள்ள, சுப்பிரமணியர் கோவில், துர்க்கையம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சின்னக்காளியம்மன் கோவில் மற்றும் தென்தாரை பெரிய காளியம்மன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

* ஆடி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன், ஊத்துக்குளியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், ஆதிபராசக்தி அம்மன், சவுடேஸ்வரியம்மன் கோவில்களில் அபிஷேக, ஆராதனைகளுடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. மாலை, 4:30 மணிக்கு பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

* பவானிசாகர் அடுத்த,தொட்டம்பாளையம், ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சவுடேஸ்வரியம்மனுக்கு, ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.

* ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், சவுடேஸ்வரி அம்மன் கோவில், வேம்பத்தி சொக்கநாச்சியம்மன் கோவில், அத்தாணி, செம்புளிச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

* ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், சவுடேஸ்வரி அம்மன் கோவில், வேம்பத்தி சொக்கநாச்சியம்மன் கோவில், அத்தாணி, செம்புளிச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

* கோபி அருகே. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி முன் உள்ள, 60 அடி நீள குண்டத்தில், தீபமேற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோல், மொடச்சூர் தான்தோன்றியம்மன், சாரதா மாரியம்மன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தவிர, கோபி பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !