உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்படிநாகாத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

வேம்படிநாகாத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

மானாமதுரை:மானாமதுரை பழைய தபால் ஆபிஸ் தெருவில் சங்குப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள வேம்படிநாகாத்தம்மன் கோயிலில் ஆடி பவுர்ணமி பொங்கல் பூஜை நடந்தது.ஏராளமான பக்தர்கள் வைகைஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு  அபிஷேகம் செய்தனர்.மாலை கோயில் முன் உலக நன்மைக்காகவும்,மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.முன்னதாக கோயில் முன் அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !