கஜூராகோ கோயில்கள்...
ADDED :2670 days ago
மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற கஜூராகோ கோயில்களைப் பற்றியும், அங்குள்ள சிருங்கார ரசம் ததும்பும் சிற்பங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கோயில்கள் பற்றிய ஒரு கதை.
காசியைச் சேர்ந்த கோயில் பூசாரியின் மகளான ஹேமாவதி என்பவள், ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது, அவள் அழகில் மயங்கிய சந்திரன் பூமிக்கு வந்து, அவளை மணந்துகொண்டார். அதன் மூலம் அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தையால் உருவான சகுந்தலா என்ற வம்சத்தினர் சந்திரனையே குலதெய்வமாக வழிபட்டனர். அவர்கள் கஜூராகோவில் 85 கோயில்களை நிர்மாணித்தார்களாம். அவற்றில் பல கோயில்கள் கால சுழற்சியால் பாழ்பட்டு போக, இன்று 22 கோயில்கள் மட்டுமே முழுமையாகக் காணப்படுகின்றன.