பலிபீடம்
ADDED :2670 days ago
பலிபீடம் பாசத்தை உணர்த்துகிறது. அதனை ‘ஸ்ரீபலிநாதர்’ எனவும் கூறுவர். கோயிலில் எட்டு மூலைகளிலும் எட்டு பலிபீடங்கள் உண்டு. அவை இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக்பாலகர்களை உணர்த்துகிறது. பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்தமாதாக்களை உணர்த்தும் பீடங்களும் உள்ளன. இவற்றுக்கெல்லாம் தலைமைப் பீடமே நந்திதேவருக்குப் பின்னுள்ள பலிபீடமாகும்.