உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை பிரம்மோற்சவ பணிகள்: ஏற்பாடுகள் தீவிரம்

திருமலை பிரம்மோற்சவ பணிகள்: ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதி: திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா உலகப்புகழ் பெற்ற திருவிழாவாகும். வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு முறை நடைபெறும்.

இந்த வருடம் இரண்டு முறை நடைபெறுகிறது. சிறப்பு பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதம் 13ந்தேதி துவங்கி 21ந்தேதி வரை நடைபெறும்,நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் மாதம் 10ம் தேதி துவங்கி 18 ம்தேதி வரை நடைபெறும். இரண்டு பிரம்மோற்சவ விழாக்களையும் சிறப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த வருடம் பிரம்மோற்சவ விழாவினை சிறப்பிக்க பத்து மாநிலங்களில் இருந்து கலாச்சார குழுவினர் வருகை தர உள்ளனர்.

பெருமாளுக்கு  டொயோட்டா கார்: திருமலை திருப்பதி பெருமாளுக்கு பக்தர்கள் விதவிதமான காணிக்கைகளை வழங்குவது வழக்கம்.ஹர்ஷா டொயோட்டோ தலைவர் ஹர்ஷவர்தன் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான  டொயோட்டோ யாரிஸ் ரக காரை பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கினார்,காரை கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !