உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதிலைப்பட்டி ஆவுடைநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு

மிதிலைப்பட்டி ஆவுடைநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம். மிதிலைப்பட்டி ஆவுடைநாதர் சிவயோகவல்லி அம்பாள் கோயிலில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு வரும் 3ம் தேதி அன்று மாலை 7-00 மணி அளவில் அம்மன் சன்னதியில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும். திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் சுமங்கலிப் பெண்கள் ரூ. 30/- கோயில் அலுவலகத்தில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு குத்துவிளக்கு மற்றும் பூஜை சாமான்கள் கோயிலில் தரப்படும். ஏற்பாடு; சு.பெரி. சுப்பிரமணியன் செட்டியார் குடும்பத்தார், ஸ்ரீமுருகன் டிராவல் ஏஜன்சி, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !