உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வியாஸராஜ மடத்தின் மடாதிபதி தரிசனம்

வியாஸராஜ மடத்தின் மடாதிபதி தரிசனம்

காஞ்சிபுரம்: மைசூரு வியாஸராஜ மடத்தின் மடாதிபதி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். கர்நாடக மாநிலம், மைசூரு, டி.நரசிபுரத்தில், பழமையான வியாஸராஜ மடம் உள்ளது. இதன் மடாதிபதி, 1008 ஸ்ரீ வித்யா ஸ்ரீஷ தீர்த்தர், சென்னை அண்ணா நகரில் உள்ள பலிமார் மடத்தில், ஆக., 2 முதல், செப். 25 வரை சதுர்மாஸ்ய சங்கல்பம் செய்ய உள்ளார். இதையொட்டி, மைசூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரம் வந்தார். அவருக்கு காஞ்சிபுரம் வியாஸராஜ மடம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலை, வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தெற்கு மாட வீதியில் உள்ள மடத்தில், சமஸ்தான பூஜையை மேற்கொண்டார். இதில், பக்தர்கள் பங்கேற்றனர். பின், சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !