நினைத்தது நிறைவேறும் நடப்பது நலமாகும்
ADDED :2664 days ago
செல்வமுத்துக்குமாரசாமி என்னும் பெயரில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலம் வைத்தீஸ்வரன்கோயில். இவரது சந்நிதியில், தினமும் இரவு 9 மணிக்கு மூன்று வெள்ளிக் கிண்ணத்தில் புழுகு, பச்சைகற்பூரம், சந்தனம், நான்கு எலுமிச்சம்பழம், பன்னீர் அரும்பில் தொடுத்த மாலை, வெற்றிலைபாக்கு இவற்றை படைத்து வழிபாடு நடக்கும். பின் பால், பழம், பால்சோறு நைவேத்யம் செய்வர். இதற்கு ‘புழுகுகாப்பு தரிசனம்’ என்று பெயர். அப்போது குமரகுருபரர் பாடிய முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை ஓதுவார் பாடுவார். பிறகு, பக்தர்களுக்கு விபூதியும், நைவேத்யம் செய்த பால்சோறு பக்தர்களுக்கு வழங்குவர். இந்தக் காட்சியைத் தரிசித்தவர்களுக்கு முருகன்அருளால் நினைத்தது நடக்கும், நடப்பதும் நல்லதாக அமையும்.