சின்னமயி யார் தெரியுமா?
ADDED :2664 days ago
ராமகிருஷ்ண பரமஹம்சர் காளியோடு நேரடியாக பேசும் வல்லமை பெற்றவர். அவருக்கு ஞானம் ஏற்பட்டபின், கண்ணுக்கு காளி சாதாரண சிலையாகத் தெரியவில்லை. ‘மிருண்மயி’யாக இருந்த காளி ‘சின்மயி’யாக மாறிவிட்டாள். ‘மிருண்மயி’ என்றால் ‘மண்ணாலான அம்பிகை’. ‘சின்மயி’ என்றால் ‘தெய்வவடிவான அம்பிகை’. இதேபோல் தான், ஞானியான ரமணர் மதுரை மீனாட்சியம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ் வரரையும் கண்டார். கோயிலிலுள்ள தெய்வங்களை சாதாரண சிலைகளாகக் கருதாமல், சாக்ஷாத் பரம்பொருளே அங்கு உறைந்திருப்பதாக எண்ணி வழிபடவேண்டும் என்று ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.