மணமக்கள் அணிந்த மாலையைத் தண்ணீரில் விடுவது ஏன்?
ADDED :2664 days ago
பூஜைக்கு பயன்படுத்திய புனிதமான பொருட்களை கால் மிதிபடாமல் ஆறு, குளம், ஏரிகளில் சேர்ப்பது நம் மரபு. இருமனம் இணையும் திருமண பந்தத்திற்கு அடையாளமான மணமாலையும் புனிதமானது. இதனால் தான் திருமண மாலைகளையும் பாதுகாப்பாக வைத்து ஆற்று நீரில் விடும் வழக்கம் இருக்கிறது. சில வீடுகளில் ஒரு வருடம் கூட பாதுகாத்து வைப்பதுண்டு. கங்கையில் இதைச் சேர்ப்பதாக ஐதீகம்.