உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பரின் பணிவு

கம்பரின் பணிவு

வால்மீகி வடமொழியில் எழுதிய ராமாயணத்தை, தமிழில் எழுத எண்ணம் கொண்டார் கம்பர். ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்று இவரை போற்றுவர். ஆனால், கம்பரோ, தன்னைப் பற்றி, “பாற்கடலை முழுவதும் குடிக்க விரும்பிய பூனை போல, ராமனின் கதையை தமிழில் எழுத ஆசைப்படுகிறேன்” என்று பணிவுடன் குறிப்பிட்டார்.  பால, அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்தம் என்னும் ஆறு காண்டங்களாகப் பிரித்து, 10368 பாடல்களை இயற்றி ‘கவிச்சக்கரவர்த்தி’ என்னும் பட்டம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !