ஆடி அமாவாசைக்கு தேவதீர்த்தம்
ADDED :2665 days ago
திருச்செங்கோட்டில் ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் சிவன் வீற்றிருக்கிறார். ‘வெள்ளை பாஷாணம்’ என்னும் பொருளால் உருவாக்கப்பட்ட சிலை இது. இவரது பாதத்தில் குளிர்ந்த நீர் சுரக்கிறது. இதை ‘தேவதீர்த்தம்’ என்பர். மருத்துவகுணம் மிக்க இந்த தீர்த்தம், பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆடி அமாவாசையன்று இதனைப் பருகுவது சிறப்பு. மூலவர் அர்த்தநாரீஸ்வரர் முன் மரகதலிங்கமும், பிருங்கி முனிவரும் காட்சி தருகின்றனர். சிவத்தலமாக இருந்தாலும், இங்கு முருகப் பெருமானுக்கே முக்கியசிறப்பு. இவரை ‘செங்கோட்டு வேலவன்’ என்பர். ஈரோட்டிலிருந்து 18கி.மீ., தூரத்திலுள்ள இந்தத்தலம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.