வாழப்பாடி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
ADDED :2663 days ago
வாழப்பாடி: கருணாநிதி மறைவால், நேற்று, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, இன்று நடக்கிறது. வாழப்பாடி, செல்வமுத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று நடக்கவிருந்தது. ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவால், அது ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, இன்று காலை, 5:30 மணிக்கு திருக்கல்யாணம், 7:00 மணிக்கு கரகம் எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து, சுவாமி திருத்தேர் ரதமேறுதல், ஆடு, கோழி பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தல், தேரோட்டம் நடக்கிறது. மதியம், தேர் நிலைபெயர்த்தல், கோவிலிலிருந்து, அக்ரஹாரம் ராஜவீதியில் தேரை இழுத்துச் செல்லுதல் நடக்கிறது. மாலை, வைத்திபடையாச்சி தெருவில், தேர் நிலைநிறுத்தல் நடக்கிறது. நாளை முதல், ஆக., 13 வரை, நிகழ்ச்சிகளில் மாற்றம் இல்லையென, விழாக்குழுவினர் தெரிவித்தனர்.