உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேர ஈஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம்

குபேர ஈஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம்

மோகனூர்: மழை வேண்டி, என்.புதுப்பட்டி குபேர ஈஸ்வரர் கோவிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது. மோகனூர் அடுத்த, என்.புதுப்பட்டியில் குபேர ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அங்கு, நேற்று மாலை பிரதோஷ விழா மற்றும் வருண யாகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு கணபதி யாகத்துடன் விழா துவங்கியது. பகல், 12:00 மணிக்கு மழை, உலக நன்மை வேண்டி சிறப்பு வருண ஜபம் நடந்தது. சிவாச்சாரியார்கள் நாகராஜ், சுப்பிரமணியம், சுகவனம், ராம்குமார் உள்ளிட்டோர் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் அமர்ந்து, 5,000 முறை அர்ச்சனை ஓதினர். மாலை, 5:00 மணிக்கு சுவாமி மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பிரதோஷ வழிபாடு நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !