திருப்பரங்குன்றம் சிவனுக்கு சிறப்பு பூஜை
ADDED :2773 days ago
திருப்பரங்குன்றம், ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயில், கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில், கீழரத வீதி அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் அபிஷேகம், பூஜை முடிந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை நடந்தது.