அழகு நாச்சியம்மன் கோவிலில் கஞ்சி வார்த்தல் விழா
ADDED :2928 days ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் கஞ்சி வார்த்தல் விழா நடந்தது. அதையொட்டி, கடந்த 7ம் தேதி கொடியேற்றப்பட்டு தொடர்ந்து சிறப்பு பூஜை, சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெயலலிதா செய்திருந்தார்.