உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி 2 ரோப்காருக்கு பிரான்ஸ் இயந்திரங்கள், கம்பிவடம்

பழநி 2 ரோப்காருக்கு பிரான்ஸ் இயந்திரங்கள், கம்பிவடம்

பழநி : பழநி முருகன் கோயிலில் இரண்டாவது ரோப்கார்களுக்கு தேவையான இயந்திரங்கள், கம்பிவடம் உட்பட அனைத்தும் பிரான்ஸ் நாட்டில் தயார் செய்யப்பட்டு விரைவில் இங்கு கொண்டு வரப்பட உள்ளன. பழநி முருகன் மலைக்கோயில் ரோப்கார் ஸ்டேஷன் அருகே, ரூ.73 கோடி செலவில் 2வது ரோப்கார் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் பிரான்சை சேர்ந்த போமா ரோப்வே நிறுவனம், சென்னை தனியார் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்கிறது.இப்பணிகளுக்கான பூமிபூஜை கடந்த ஜூன் 4ல் நடந்தது.புதிய ரோப்காரில் ஒருபெட்டியில் 10 பேர் அமரலாம். கீழ், மேல் என மொத்தம் 8 பெட்டிகள் பொருத்தப்படும். இரு நிமிடங்களில் மலைக்குச் செல்லலாம். தற்போதைய ரோப்காரில் ஒருமணி நேரத்திற்கு 20 பேர் செல்கின்றனர். 2வது ரோப்காரில் 1200 பக்தர்கள் செல்லமுடியும். சாப்ட், கம்பி வடம், உருளை, இயந்திரங்கள் உட்பட அனைத்தும் பிரான்ஸ் நிறுவனத்தில் தயார் செய்யப்படுகிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 5 ஆண்டுகள் தொடர்ந்து அவர்களே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த செய்துள்ளோம். ரோப்காருக்குரிய பாகங்களை தனி கண்ெடய்னர் மூலம் கொண்டுவர ஏற்பாடு செய்துள்ளோம். கீழ்தளம், மேல்தளத்தில் டவர் அமைக்க கட்டுமானப்பணிகள் துவங்க உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !