வரலட்சுமி பெயர்க்காரணம்
ADDED :2651 days ago
சவுராஷ்டிர நாட்டின் ராணியான சுசந்திராவிடம் ஏராளமான செல்வம் இருந்தது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை விட தானே பெரியவள் என பெருமை பேசியதோடு அடாத செயல்களிலும் ஈடுபட்டாள். அவளது ஆணவத்தை போக்க விரும்பிய லட்சுமி அவளை ஏழையாக்கினாள். சுசந்திராவின் மகள் சாருமதி தாயைக் கண்டு வருந்தினாள். லட்சுமி தாயாரிடம் மன்னிப்பு கேட்டதோடு வரலட்சுமி விரதம் இருந்தாள். மகளைக் கண்ட சுசந்திராவும் விரதத்தில் பங்கேற்றாள். கருணைக்கடலான மகாலட்சுமியின் மனம் இரங்கி இழந்ததை மீண்டும் வழங்கினாள். செல்வ வரம் அளித்ததால் ’வரலட்சுமி’ என பெயர் பெற்றாள் மகாலட்சுமி.