சங்கு சொல்லும் சங்கதி
ADDED :2651 days ago
வலம்புரிச்சங்கை பூஜையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் நிறுவனத்தில் சங்கை வழிபட தடை நீங்கி லாபம் பெருகும். வலம்புரிச்சங்கில் பால் வைத்து லட்சுமியை வழிபட்டால் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சங்கில் ஊற்றிய புனித தீர்த்தத்தை பருகினால் நீண்ட ஆயுள், உடல் நலம் சிறக்கும். வெள்ளியன்று சங்குதீர்த்தத்தை தெளித்தால் வீட்டிலுள்ள வாஸ்து தோஷம் அகலும்.