கரபுரநாதர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி
ADDED :2651 days ago
வீரபாண்டி: மதுரையில் நடக்கும் திருவிளையாடல் லீலைகளில் முதல் முறையாக இன்று சேலம் கரபுரநாதர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கயுள்ளது. சேலம், உத்தமசோழபுரம், திருமணிமுத்தாற்றின் கரையில் உள்ள பழமையான கரபுரநாதர் கோவிலில், ஆண்டு முழுவதும் சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் நடக்கின்றன. மதுரை வைகை ஆற்றங்கரையில் நடந்த, வந்தி கிழவிக்காக சிவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் புராணத்தை நினைவு கூறும் வகையில், மீனாட்சியம்மன் கோவிலில் உற்சவம் நடந்து வருகிறது. அதை போல இந்தாண்டு முதல், சேலம், கரபுரநாதர் கோவிலிலும் இன்று மாலை, 5:00 மணிக்கு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரம்படி, பிட்டு மாவு பிரசாதம் வழங்கப்படும்.