அமாவாசை திதி வழிபாட்டுத் தலம்
ADDED :2596 days ago
சூரிய, சந்திரர்கள் கிரக பூர்வமாகக் கூடும் அமாவாசை தோறும், சூரிய, சந்திர மூர்த்திகளே நேரில் வந்து வழிபடும் தலம், கண்டிரமாணிக்கம். இங்கு தெற்கு நோக்கி நின்ற ராமச்சந்திரமூர்த்தியின் திருச்சன்னதியில் ராமரையும், ஆஞ்சநேயரையும் அமாவாசையன்று வழிபடுவது அளப்பரிய, மிகவும் உன்னதமான பலாபலன்களைத் தருவதாகும். ராமச்சந்திர மூர்த்தியே தன் திருவாக்கினால் மறை ஓதி ஞானிகளுக்கு அருள்புரிந்த திருநாளும் அந்த யுகத்தின் விஷ்ணுபதிப் புண்ய காலமாகும். எனவே அமாவாசை தோறும் எண்ணற்ற மகரிஷிகளும் சித்தபுருஷர்களும் இத்திருத்தலத்தில் சூட்சும, ஸ்தூல வடிவில் தெற்கு நோக்கிய ராமரை வழிபட்டு, பலாபலன்களை பூலோக ஜீவன்களுக்கு தருவதால் அமாவாசை வழிபாடு இத்தலத்தில் பெறுதற்கரிய நல்வரங்களைத் தரும். நீண்ட நாள் காரியத் தடங்கல்கள் நிவர்த்தியாகி, நற்காரியங்கள் சித்தியாகும்.