சிங்கம்புணரி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் வடுக பைரவர் பூஜை
ADDED :2703 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் வடுக பைரவர் பூஜை நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமி தினமான செப்.3ம் தேதி வடுக சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு வடுக பைரவர் சன்னதி முன் யாக குண்டம் அமைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து பைரவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.