உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரமேரூர் திருமுக்கூடல், வெங்கடேச பெருமாள் கோவிலில், உறியடி விழா

உத்திரமேரூர் திருமுக்கூடல், வெங்கடேச பெருமாள் கோவிலில், உறியடி விழா

உத்திரமேரூர்: திருமுக்கூடல், வெங்கடேச பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் (செப்., 3ல்) உறியடி விழா கோலாகலமாக நடந்தது.

திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் (செப்., 3ல்), கிராமத்தின் நடுத்தெருவில், உறியடி விழா நடந்தது. கிராம இளைஞர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று உறியடித்தனர்.அதே போல், உத்திரமேரூர் வேணுகோபால் சுவாமி கோவிலிலும், இந்த உற்சவம் நடந்தது. மலர் அலங்காரத்தில், வாண வேடிக்கையுடன், உற்சவர் வீதியுலா சென்றார்.

கண்ணன், ராமன், சீதா, ஹனுமன் போன்ற சுவாமிகளின் வேடமிட்டு, அப்பகுதி குழந்தைகள், பஜனை பாடல் பாடியபடி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !