உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலை முருகன் கோவிலுக்கு மறுசுழற்சி இயந்திரம் காணிக்கை

சுவாமிமலை முருகன் கோவிலுக்கு மறுசுழற்சி இயந்திரம் காணிக்கை

சுவாமிமலை முருகன் கோவிலுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மறுசுழற்சி இயந்திரத்தை வாழும் கலை அமைப்பு இயந்திரம் வழங்கல்

சுவாமிமலை கோவிலில், பயன்படுத்தப்படும் பூ, இலை உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி செய்வதற்காக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரத்தை, வாழும் கலை அமைப்பு சார்பில் நேற்று (செப்., 5ல்) வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவில்களில் பயன் படுத்தப் படும் பூ, இலை, வாழைப்பழத்தின் தோல் உள்ளிட்ட மக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்து கோவில் நந்தவன தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரத்தை வாழும் கலை பயிற்சி அமைப்பின் தலைவர் ரவிசங்கர்குருஜி வழங்கினார். இந்த இயந்திரத்தை கொண்டு நாள் ஒன்றுக்கு 1 டன் மறுசுழற்சி செய்ய முடியும். இயற்கை முறை உரமாக இருப்பதால் மண் வளம் புத்துயிர் பெறும். இது போன்ற இயந்திரம் ஏற்கனவே வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோவில், கௌஹாத்தி காமகியா கோவில் உள்ளிட்ட 7 கோவில்களில் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் நாள் ஒன்றுக்கு 50 கிலோ வரும். விழா நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் 150 கிலோ வரும். இவ்வாறு வரும் பூ போன்ற இந்த பொருட்களை பேரூராட்சி குப்பை கிடங்கிற்கு கொடுக்கப் படும். இந்த இயந்திரம் மூலம் மறுசுழற்சி மூலம் உரமாக்கி கோவில் நந்தவனத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் தேவையில்லாமல் ஏற்படும் குப்பை கழிவு குறைக்கப்படும். இதைதொடர்ந்து பாபநாசத்தில் கிராமப்புற சமூக மக்களின் குடும்பங்களின் வருமானத்தை உயர்த்தும் பல்வேறு திறன்களை வளர்க்க ஆண் மற்றும் பெண் இளைஞர்களுக்கான புதிய பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !