உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் குன்னம்மாள் மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணராயபுரம் குன்னம்மாள் மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த குப்புரெட்டிப்பட்டி ஆழ்வார் தெருவில், புதிதாக கட்டப்பட்ட மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (செப்., 5ல்) நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (செப்.,4ல்)  காலை,லாலாப் பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.

கணபதி ஹோமம், லட்சுமி பூஜை மற்றும் நவக்கிரக ஹோமங்கள் அடுத்து நடந்தன. நேற்று (செப்., 5ல்) காலை கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை ஆகிய பூஜைகள் செய்து, குன்னம்மாள், மதுரை வீரன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் குப்புரெட்டிப்பட்டி, சேங்கல், பழைய ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !