/
கோயில்கள் செய்திகள் / குளித்தலை உப்பிடமங்கலம் வாரச்சந்தை அருகே சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
குளித்தலை உப்பிடமங்கலம் வாரச்சந்தை அருகே சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2807 days ago
குளித்தலை: உப்பிடமங்கலம் வாரச்சந்தை அருகே, சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. குளித்தலை அடுத்த, உப்பிடமங்கலம், வாரச்சந்தை அருகே, சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையோட்டி, நேற்று முன்தினம் (செப்., 4ல்) காலை, புலியூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு, பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, அன்று மாலை யாக சாலையில், முதல் கால பூஜையாக கணபதிஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. நேற்று (செப்., 5ல்) காலை, இரண்டாம் கால பூஜை முடிந்து, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.