பெரியபட்டினம் தர்காவில் கொடியிறக்கம்
ADDED :2665 days ago
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடுவிழா கொடியேற்றம் கடந்த ஆக., 18 அன்று மினராவில் ஏற்றப்பட்டது. உலக நன்மைக்கான மவுலீது எனும் புகழ் மாலை ஓதப்பட்டது. ஆக., 28 நள்ளிரவு முதல் மறுநாள் அதிகாலை 29 சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். நேற்று (செப்., 7ல்) மாலை 5:30 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டு, தப்ரூ எனும் பிரசாதம் வழங்கப்பட்டது.