உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவம் சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருப்பதி பிரம்மோற்சவம் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு செல்லும் பத்தர்களுக்காக, அரக்கோணம் - ரேணிகுண்டா, சென்னை - அரக்கோணம் இடையே, 11 முதல், 20ம் தேதி வரை, பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

* சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, அரக்கோணத்துக்கு, 11ம் தேதியில் இருந்து, 20ம் தேதி வரை, இரவு, 9:40 மணிக்கு இயக்கப்படும் ரயில், இரவு, 11:00 மணிக்கு, அரக்கோணம் சென்றடையும்

* அரக்கோணத்தில் இருந்து, மாலை, 3:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், மாலை, 4:30 மணிக்கு, ஆந்திரா மாநிலம், ரேணிகுண்டா சென்றடையும்

* ரேணிகுண்டாவில் இருந்து, மாலை, 5:10 மணிக்கு இயக்கப்படும் ரயில், இரவு, 9:00 மணிக்கு, சென்னை கடற்கரை நிலையம் சென்றடையும்.

இந்த ரயில்களில், எட்டு முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைத்து இயக்கப் படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !