ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
ADDED :2577 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபெருங்கோயிலுடையான் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணியளவில் மாடவீதி சுற்றி, கோயிலுக்கு கொடிபட்டம் கொண்டு வரபட்டது. அங்கு கல்யாணராமபட்டர் கொடிபட்டம் ஏற்றி, சிறப்பு பூஜைகளை செய்தார். கோயில் திருமஞ்சன மண்டபத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி,பூமிதேவி சமேதராக எழுந்தருளினர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பட்டர்கள், கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் காலை 10:00 மணியளவில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி மண்பம் எழுந்தருளலும், இரவு 8:00 மணியளவில் திருவீதி புறப்பாடும் நடக்கிறது. செப்.21 ம் தேதி காலை 6:00 மணியளவில் செப்பு தேரோட்டமும் நடக்கிறது.