பழனி முருகன் கோயில் விநாயகர் சதுர்த்தி விழாவில் யானை கஸ்தூரிக்கு பூஜை
பழநி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழநி முருகன் கோயில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கொழுக்கட்டை படைத்து பூஜைகள் நடந்தது.
பழநி கிழக்குரதவீதி பெரியநாயகிம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வேளாளர் வீட்டில் செய்த களிமண் பிள்ளையார் சிலையை முத்துக்குமாரசுவாமி மண்ட பத்தில் வைத்து பூஜை செய்தனர். அதன்பின் யானை கஸ்தூரிக்கு முகப்புபட்டம், காலில் கொழுசு அணிவித்து தேங்காய் பழத்துடன் கஸ்தூரிக்கு தீபாராதனை நடந்தது. கொழுகட்டை,
பொங்கலை கண்காணிப்பாளர் முருகேசன், பேஷ்கார்சேகர் ஊட்டினர்.கோயில் வெளிப் பிரகாரத்தை யானை கஸ்தூரி வலம் வந்தது. இதேப்போல மாலை சாயரட்சை பூஜையில் விநாயகர் சப்பரத்தில் உலா வந்தார்.
சரவணப்பொய்கை விநாயகர், அபரஞ்சி விநாயகர், கிரிவீதியில் தலை வலிபோக்கும் விநாயகர், நினைத்ததை முடிக்கும் விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்தனர்.