உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சிவசேனா மற்றும் தமிழக இந்து மக்கள் முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோட்டைக் குளத்தில் கரைக்கப் பட்டன.

இதில் மாவட்ட தலைவர் கனிவளவன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் தங்க. முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைவர் செல்வம் வரவேற்றார். மாநில இளைஞரணி தலைவர் பாலாஜி, வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜோதிமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்து மக்கள் முன்னணி நிறுவனர் தமிழ்செல்வம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 15 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கோட்டைக் குளத்தில் கரைக்கப்பட்டன.

பழநி:இந்துமுன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. நேற்று(செப்., 17ல்) பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட நுற்றுக்குமேற்பட்ட விநாயகர் சிலைகள் பாதவிநாயகர் கோயிலுக்கு கொண்டுவந்தனர். மாநில செயலாளர் முத்துகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன், பா.ஜ., விவசாய அணி தேசியக்குழு உறுப்பினர் திருமலைசாமி, ஆர்.எஸ்.எஸ்., மதுரை கோட்ட தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பாதவிநாயகர் கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் ரோடு, காந்திரோடு, தேரடி வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு சண்முகநதியில் கரைக்கப்பட்டது. போலீசார் பலத்த பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.

கொடடைக்கானல்:நகர ஒன்றிய இந்து முன்னணி சார்பில்,விநாயகர் ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக வந்தனர். சிலைகள் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் ஒன்றிணைந்தன. ஏரி ரோடு, 7 ரோடு, அண்ணாசாலை, ஆனந்தகிரி, அண்ணாநகர், டோபி கானல் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.

கன்னிவாடி:இந்து மக்கள் கட்சி சார்பில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 33 சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, மணியகாரன்பட்டி, தம்மனம்பட்டி, கொத்தப்புள்ளி உள்ளிட்ட இடங்களில் இருந்து, கன்னிவாடிக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. மாநில அமைப்பாளர் செல்வம் தலைமை வகித்தார். ஊர்வலத்தை, மாநில பொறுப்பாளர் குமார், துவக்கி வைத்தார். நிர்வாகிகள் மணிகண்டன், தர்மா, முத்துச்சாமி, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிலைகள் நவாப்பட்டி, மணியகாரன்பட்டி, புதுப்பட்டி வழியே ஆலத்தூரன் பட்டிக்கு ஊர்வலமாக எடுத்து சென்று மச்சக்குளத்தில் கரைக்கப்பட்டன.

வேடசந்தூர்:இந்து மக்கள் கட்சி சார்பில், விநாயகர் ஊர்வலம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர்கள் ரவிக்குமார், ரவிபாலன் ஊர்வலத்தை துவக்கிவைத்தனர். 59 வாகனங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே துவங்கி, கொல்லம்பட்டறை, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் வழியாக அழகாபுரி அணையில் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நத்தம்: இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதில் நத்தம் கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் ஊர்வலம் துவங்கியது. மாவட்ட துணைத்தலைவர் செல்லமணி தொடங்கி வைத்தார். 45க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டது. ஊர்வலமானது பஸ்நிலையம்,மூன்றுலாந்தர்,அவுட்டர் சாலை வழியாக சென்று அம்மன் திருக்குளத்தை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.

முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகானந்தம்,வடக்கு ஒன்றிய தலைவர் கார்த்திக்ராஜா,நகரச்செயலாளர்கள் மணிமாறன்,சின்னத்தம்பி,நகர துணைத்தவைர் வீரமணி, மாநிலபொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !