ராமநாதபுரம் நெச்சிவயல் ஊரணியில் விநாயகர் சிலை கரைப்பதற்கு போதிய தண்ணீர் இல்லை
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு நொச்சி வயல் ஊரணியில் போதிய தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (செப்.,16ல்) இரண்டாவது நாளாக இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ., சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நீர்நிலைகள் கரைக்கப்பட்டன.
ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் 16 சிலைகள், பாரதிநகர், பட்டணம் காத்தான், சக்கரக் கோட்டை, வெளிப்பட்டினம், ஓம் சக்தி நகர் நகரை அடுத்த பகுதிகளில் 23 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இந்த சிலைகள் நேற்று (செப்., 16ல்) ஊர்வலமாக வாகன
ங்களில் கொண்டு செல்லப்பட்டன. வண்டிக்கார தெருவில் மாட்டு வண்டியுடன் செய்யப்பட்ட விநாயகர் சிலை அனைவரையும் கவர்ந்தது. இதனை ஆட்டோவில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். 39 சிலைகளும் ராமநாதபும் வழிவிடு முருகன் கோயில் அருகே கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மாலை 5:00 மணி முதல் நொச்சி வயல் ஊரணியில் கரைக்கப்பட்டன.
ஊரணியில் போதுமான தண்ணீர் இல்லை. மோட்டார் வைத்து தண்ணீரை பள்ளங்களில் சேகரித்தனர். அப்படி இருந்தும் ஊரணியில் முழங்கால் அளவே தண்ணீர் இருந்தது. வேறு வழியின்றி அதில் 39 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.