தொண்டாமுத்தூர் பேரூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
தொண்டாமுத்தூர் : சுண்டக்காமுத்தூர் பகுதியில் வைக்கப்பட்ட 10 சிலைகள், பேரூர் பெரிய குளத்தில் நேற்று (செப்.,16ல்) கரைக்கப்பட்டன.
பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியன்று, 66 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில், இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட 56 சிலைகள் நேற்று முன்தினம்(செப்.,15ல்) சாடிவயல் சின்னாற்றில் விசர்ஜனம்செய்யப்பட்டன.
சுண்டக்காமுத்தூர் பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில், 6 சிலைகளும், பொதுமக்கள் சார்பில், 4 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இச்சிலைகள் நேற்று (செப்., 16ல்) தொண்டாமுத்தூர், தாரை தப்பட்டை முழங்க, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, புட்டுவிக்கி ரோட்டில் உள்ள பேரூர் பெரியகுளத்தில் மாலை விசர்ஜனம் செய்யப்பட்டன.அங்கு போலீசார்,தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.