/
கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் அருகே மரவெட்டி கிராமத்தில் பூவந்தி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
முதுகுளத்தூர் அருகே மரவெட்டி கிராமத்தில் பூவந்தி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2577 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மரவெட்டி கிராமத்தில் பூவந்தி அய்யனார்,ஸ்ரீ கருப்பண சாமி,ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மஹா கணபதி ஹோமமம் பூஜை,அணுக்கை, விக்னேஸ்வரபூஜை, பஞ்சகவ்யபூஜை, வாஸ்துசாந்தி,யாகசாலைபிரவேசம்,முன்தினம் முதல்காலயாக பூஜையாக ஜெபம், ஹோமம்,பூர்ணாஹீதி துவங்கபட்டது.ஆறு காலயாக பூஜைகள் நாகநாதர் சுவாமி திருக் கோயில் குமாரராஜசிவம் நடத்தினர்.
நேற்று (செப்.,16ல்) காலை கோமாதா பூஜை நடத்தபட்டு,கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்ப நீர் ஊற்றபட்டது.சுவாமி மற்றும் பரிவார தேவதைகளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,சிறப்பு அபிஷேகங்கள்,தீபாராதனைகள் நடந்தது.சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.