உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் முத்­து­மா­ரி­யம்­மன் கோவில் தேர் திருவிழா

ரிஷிவந்தியம் முத்­து­மா­ரி­யம்­மன் கோவில் தேர் திருவிழா

ரிஷிவந்தியம்: சூ.பாலப்­பட்டு முத்­து­மா­ரி­யம்­மன் கோவில் தேர்­தி­ரு­விழா நேற்று நடந்­தது. ரிஷி­வந்­தி­யம் அடுத்த சூ.பாலப்­பட்டு முத்­து­மா­ரி­யம்­மன் கோவில் தேர்­தி­ரு­விழா கடந்த 5ம் தேதி கொடி­யேற்­றத்­து­டன் தொடங்­கி­யது. தொடர்ந்து அங்­கா­ளம்­மன், காத்­த­வ­ரா­யன், ஆரி­ய­மாலா சுவா­மி­க­ளின் பிறப்பு நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­பட்டு, சுவாமி வீதி­யுலா நடந்­தது. கடந்த 14ம் தேதி, ஊரணி பொங்­கல் மற்­றும் பால்­குட ஊர்­வ­லம் நடந்­தது. 100க்கும் மேற்­பட்ட பொது­மக்­கள் பால்­கு­டம் சுமந்து ஊர்­வ­ல­மாக சென்று நேர்த்தி கடன் செலுத்­தி­னர். நேற்று காலை 10:00 மணிக்கு காளி கோட்டை இடித்­தல் நிகழ்ச்­சியை தொடர்ந்து தேர்­தி­ரு­விழா நடந்­தது. சுற்று வட்­டார பகு­தியை சேர்ந்த பொது­மக்­கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து ஊர்­வ­ல­மாக இழுத்து சென்­ற­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !