உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல்லில், விஸ்வகர்மா ஜெயந்தி சிறப்பு அபிஷேகம்

நாமக்கல்லில், விஸ்வகர்மா ஜெயந்தி சிறப்பு அபிஷேகம்

நாமக்கல்: நாமக்கல்லில், விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. செப்.,17ஐ, ஸ்ரீ விஸ்வகர்மா தெய்வத்தின் பிறந்த தினமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதையொட்டி நாமக்கல் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க இளைஞரணி பேரவை சார்பில், விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மணிக்கூண்டு அருகில் விஸ்வகர்மா சுவாமியின் படத்திறப்பு விழா நடந்தது.

தியாகராஜர் பேரவை தலைவர் கோட்டை கோபால் தலைமை வகித்தார். தங்கவேல் ஆசாரியார் சுவாமி படத்தை திறந்து வைத்தார். ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !