ஓமலூர் வெங்கட்ரமண சுவாமி கோவிலில் அக்., 20ல் புரட்டாசி தேரோட்டம்
ADDED :2578 days ago
ஓமலூர்: புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று(செப்., 21ல்) முதல், காடையாம்பட்டி, சின்ன திருப்பதி வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்கு ஏராளமானோர் வருவர். அதற்கு முன்னேற்பாடாக, கோவில் வளாகத்தைச் சுற்றி வியாபார கடைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அக்., 15ல், சன்னதியில் விஸ்வசேனர் பூஜை, 17ல் கொடியேற்றம், 18ல், குதிரைவாகன உற்சவம், 19ல் திருக்கல்யாண உற்சவம், அன்று மதியம் கருட சேவை, மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம், 20 மாலை, 3:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 21ல், வேடுபறி உற்சவத்துடன் விழா முடிவடையும். அக்., 18(சரஸ்வதி பூஜை), அக்., 19(ஆயுத பூஜை)க்கு மறுநாள் தேரோட்டம் நடக்கவுள்ளதால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புண்டு. அதனால், கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது.