உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிப்பிரதோஷ பிரதோஷ பூஜை

சனிப்பிரதோஷ பிரதோஷ பூஜை

நத்தம்:நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயிலில் உள்ள நந்தி சிலைக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிேஷகங்கள் நடந்தது. இதையடுத்து  கைலாசநாதர் மற்றும் செண்பகவள்ளி அம்மன் சுவாமிகளுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.


பின், சுவாமி புறப்பாடாகி பிரகாரத்தில் வலம் சென்றார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி  ஆதிசுயம்பீஸ்வரர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பல்வேறு வகையான அபிேஷகங்கள் மற்றும் மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை சிவாச்சாரியார் உதயக்குமார் குழுவினர் செய்திருந்தனர். சின்னாளபட்டி: சின்னாளபட்டி  சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு  சுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் சனிமகா பிரதோஷ அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !