உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சனேயருக்கு துளசி அர்ச்சனை

ஆஞ்சனேயருக்கு துளசி அர்ச்சனை

திருப்போரூர்: புரட்டாசி மாதம் பிறந்ததைத் தொடர்ந்து, நேற்று, முதல் புரட்டாசி சனிக்கிழமை என்பதால், புதுப்பாக்கத்தில் உள்ள வீர ஆஞ்சனேயர் கோவிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனைக்கு துளசி மாலை கொடுத்து வழிபட்டனர்.கேளம்பாக்கம்- -  வண்டலுார் சாலையில் உள்ள இக்கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.இதேபோன்று, கொளத்துார், நின்ற கோல கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில், திருப்போரூர் பஜனை பெருமாள் கோவில், நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில்  உள்ள பெருமாள் சன்னதி ஆகியவற்றிலும் புரட்டாசி வழிபாடு விமர்சையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !