உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசாமி கோவில் செயல் அலுவலர் மாற்றம்

திருப்போரூர் கந்தசாமி கோவில் செயல் அலுவலர் மாற்றம்

திருப்போரூர்: கந்தசாமி கோவில் நிலங்களை, அதிரடியாக மீட்ட செயல் அலுவலர், நற்சோணை, சென்னை கோவிலுக்கு மாற்றப்பட்டார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், திருப்போரூரில், கந்தசாமி கோவில் உள்ளது.
கோவிலுக்கு சொந்தமாக, திருப்போரூர், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பல ஏக்கர் நிலங்கள் உள்ளன.இக்கோவில் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம், தனியார் பலர்
அபகரித்துள்ளனர்.

கோவில் செயல் அலுவலரான, நற்சோணை, அபகரிப்பு நிலங்களை கண்டறிந்து, அவற்றுக்கு, தனியார் பெயரில் வழங்கிய பட்டாவை ரத்து செய்ய, தொடர்ந்து வலியுறுத்தினார்.

வருவாய் கோட்டாட்சியர், முத்து வடிவேல், ஆவண ஆய்விற்கு பின், தனியார் பட்டாவை ரத்து செய்து, கோவில் பெயரில் பட்டாவழங்கினார். செயல் அலுவலரின், நடவடிக்கை தீவிரத்தால், அரசியல் பிரமுகர்கள்அதிர்ந்தனர்.

இந்நிலையில், சென்னை, ராயபேட்டை சித்திபுத்தி விநாயகர் கோவிலுக்கு அவரை பணியிடம் மாற்றி, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில் செயல் அலுவலர், வெங்கடேசன், கந்தசாமி கோவிலுக்கு, கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !