உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்க்கம் செல்ல வழியிருக்கு!

சொர்க்கம் செல்ல வழியிருக்கு!

நபிகள் நாயகம் ஒருமுறை மெக்காவில்  தங்கியிருந்து பலரையும் சந்தித்தார். பின், மெக்காவிலிருந்து கிளம்பும் முன் நண்பர் ஒருவரின் ஞாபகம் வர அவரைச் சந்திக்க அவரது இல்லம் சென்றார். செல்வந்தரான அவர், நாயகத்தை பார்த்ததும் வாசலுக்கு வந்து வரவேற்றார்.  உள்ளே சென்ற நாயகம் புதிதாக பார்ப்பது போல திகைத்தார்.
புன்னகைத்த நண்பர் ’என்ன’ என்பது போல் தலையசைத்தார். “இங்கு திருமணம் நடந்தது போல நறுமணம் வீசுகிறதே...” எனக் கேட்டார் நாயகம். சிரித்தபடி நண்பர், “ஆமாம், நேற்று தான் எனக்கு திருமணம் நடந்தது” என்றார். நாயகத்திற்கோ ஆச்சர்யம் தாளவில்லை.  “திருமணமா... அதற்கான சுவடே இல்லையே... பணக்காரரான நீங்கள் ஊரே அமர்க்களப்படும் விதமாக திருமணம் நடத்தியிருப்பீர்களே...” என்றார். புன்னகைத்தபடி “எல்லோரும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி பணத்தை வீணாக்குகிறார்கள். அந்த தவறை செய்ய நான் விரும்பவில்லை. குடும்பத்தினர் முன்னிலையில்  எளிமையாக திருமணம் நடத்தினேன். அதில் மிஞ்சிய பணத்தில் அன்னதானம் செய்தேன்” என்றார். அவரை  அன்புடன் கட்டிக் கொண்டார் நாயகம். “தோழரே... உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன். உங்களைப் போன்றோருக்கு சொர்க்கம் செல்லும் பாக்கியம் கிடைக்கும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !