வேண்டாம் வேண்டாம் பயம் வேண்டாம்!
ADDED :2607 days ago
அக்கிரமக்காரர்கள் தெருவில் அரிவாளுடன் வந்தால்,அவர்களைப் பார்க்கும் மக்கள் பயந்து ஓடுகிறார்கள். தீங்கான செயல்களைக் கண்டு பயந்து ஓடுபவர்களைக் கெட்டவர்கள் வரிசையில் சேர்க்கிறார்கள்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.“அக்கிரமம் செய்கின்றவன் நிச்சயமாக, அவனையேஅக்கிரமத்தில் மூழ்கடிக்கின்றான். ஆனால், அவனால் இதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை,” என்றும்,“அக்கிரமக்காரர்கள் நிச்சயமாக தண்டனை அடைவார்கள்” என்றும் கூறும் நாயகம், “எவனுடைய தீங்கானசெயலுக்கு பயந்து, மக்கள் அவனுக்கு மரியாதை கொடுக்கின்றார்களோ, அவர்களே மக்களில் மகா கெட்டவர்கள்,” என்றும் ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். அக்கிரமக்காரர்களைக் கண்டு, ‘நமக்கெதற்கு வம்பு’ என நடுங்கி, ஒடுங்கிப் போவது ஏற்கத்தக்கதல்ல என்பது நாயகம்(ஸல்) அவர்களின் கருத்தாகும்.