ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் பிரம்மோத்ஸவ புஷ்பயாகம்
ADDED :2568 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் நடந்த புஷ்பயாகத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி சன்னிதியில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் செப். 13 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடக்கிறது. விழாவில் நேற்று (செப்.26) பகல்பத்து மண்டபத்தில் புஷ்பயாகம் நடைபெற்றது. புஷ்பயாகத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.