போடி மகாராஜா சுவாமி கோயில் கொடைவிழா
போடி: போடி அருகே சில்லமரத்துப்பட்டி மகாராஜா சுவாமி கோயில் கொடைவிழாவில் எட்டு வகை பந்தி, படையல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. சில்லமரத்துப்பட்டி மகாராஜா சுவாமி கோயிலில் முகூர்த்த கால் நடப்பட்டு, காப்பு கட்டுதலுடன் இவ்விழா துவங்கியது. கணபதி ஹோமம், திருவாசகம் படித்தல் உள்ளிட்டவை நடந்தது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது. பின் சீலக்காரி அம்மன், கன்னிமூல கணபதி, மகாராஜா மாயாண்டி சுவாமி, முத்தையா சுவாமிக்கு கொடை பூஜை நடந்தது. இதில், சாதம், கீரை, காய்கறி, முருங்கைக்காய், மீன், சர்க்கரைப் பொங்கல், கிழங்கு வகைகள் என எட்டுவகையான உணவு பொருட்களை சமைத்து படையல் வைத்து, அதனைத் தொடர்ந்து பிரசாத பந்தியும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. மஞ்சள் நீராடுதல் முளைப்பாரி ஊர்வலம், திருவிளக்கு பூஜை, வில்லிசை நிகழ்ச்சி, பாரிவேட்டை நடந்தது. ஏராளமானோர்
பங்கேற்றனர்.