பழநி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.1.67 கோடி
ADDED :2935 days ago
பழநி: பழநி முருகன் கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இருபத்தி ஒன்பது நாள்களில் உண்டியலில் ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 67 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய், தங்கம் 1,120 கிராம், வெள்ளி 8, 750 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 681 கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் சிவலிங்கம், வங்கியாளர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.