உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை

பழநி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை

பழநி: பழநி கோசல விநாயகர் கோயில்விநாயகர் சதுர்த்தி பொன்விழாவில், உலக நலன், மழை வேண்டியும் லட்சார்ச்சனை, வருண ெஜபம் நடக்கிறது. பழநி தெற்குரதவீதி நடேசர் சன்னதியிலுள்ள கோசல விநாயகர் கோயிலில், செப்., 26முதல் 28 வரை, விநாயகர் சதுர்த்தி பொன்விழா நடக்கிறது. இதில் உலகநலன் வேண்டி நேற்று கும்பகலசம் வைத்து, நுாறாயிரம் மலர்கள் துாவி லட்சார்ச்சனை நடந்தது. இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பருவமழை தவறாமல் பெய்ய வேண்டி கணபதி பூஜையுடன், 108 சங்காபிேஷகம், வருண  ஜெபம் நடக்கிறது. பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், சொல் அரங்கு போன்ற கலை நிகழ்ச்சிகளும் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !