உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சிஷ்ட கணபதி!

உச்சிஷ்ட கணபதி!

தமிழகத்தில் உச்சிஷ்ட கணபதிக்கு எட்டு நிலைகளுடன் கூடிய மண்டபம், கோபுரம், மூன்று பிராகாரங்கள், மதில்சுவர், விமானம் போன்றவற்றுடன் கூடிய தனிக்கோயில் நெல்லையை அடுத்துள்ள மணி முத்தீஸ்வரம் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள விநாயகர், கலியுகத்தில் கணபதியைப் பற்றி போதிக்க முத்கல மகரிஷி தென்னாட்டுக்கு அனுப்பிய சீடர்களுள் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவராம். இதுபோன்ற தோற்றமுள்ள விநாயகர் உருவத்தை வேறு எங்கும் மூலவராக கருவறையில் காண முடியாது. இந்த ரூபம் அரூபமான யோக தத்துவத்தைக் கொண்டதாகும். இந்த கணபதியை செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட தோஷங்கள் நீங்கும் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !