உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் 10 ம் ஆண்டு கம்பன் விழா

திருப்பூர் 10 ம் ஆண்டு கம்பன் விழா

திருப்பூர்:திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் 10 ம் ஆண்டு கம்பன் விழா நடந்தது.திருப்பூரில் தமிழ் ஆர்வலர்கள் இணைந்து செயல்படுத்தி வரும் கம்பன் கழகம் சார்பில், 10 வது ஆண்டு
கம்பன் விழா, நேற்று (அக்., 12ல்) குமரன் ரோடு லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது.

இதில், பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்கள் கம்பன் குறித்த தலைப்பில் நடந்த பேச்சு போட்டியில் பங்கேற்றனர்.திருப்பூர் கம்பன் கழக நிறுவன செயலாளர்
ராமகிருஷ்ணன், துணை செயலாளர் கவுசல்யா முன்னிலை வகித்தனர். 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டியில், ஜெய்வாபாய் பள்ளி மாணணி
சாந்திகா; விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவி ஜெயந்தி,; கிட்ஸ் கிளப் பள்ளி மாணவி பொன்நிசிதா முதல் மூன்று பரிசு பெற்றனர். கவிதாலட்சுமி நகர் துவக்க பள்ளி மாணவி
கிருத்திகாஸ்ரீ சிறப்பு பரிசு பெற்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் கம்பன் கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !